Menu
Your Cart

'தி இந்து' தீபாவளி மலர் 2017

'தி இந்து' தீபாவளி மலர் 2017
-5 % Out Of Stock
'தி இந்து' தீபாவளி மலர் 2017
₹143
₹150
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
காசி குறித்த ஆன்மிகப் பயண அனுபவம், நாடெங்கும் பக்தர்களை ஈர்க்கும் ஐந்து சக்தித் தல தெய்வங்களைப் பற்றிய கட்டுரைகள் ஆன்மிகப் பகுதியை அலங்கரிக்கின்றன. சினிமாவில் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தி இன்றைக்கு அடையாளம் இழந்துபோன டூரிங் டாக்கீஸ், பிரம்மாண்ட கட்அவுட் - பேனர், விலங்குகளை மையமிட்ட படங்கள் உள்ளிட்ட அம்சங்களை சினிமா பகுதி அலசுகிறது. புதுமைப்பித்தனின் மரபுத் தொடர்ச்சியாக வண்ணதாசன், வண்ணநிலவன், விக்கிரமாதித்யன், கலாப்ரியா என்கிற ‘தாமிரபரணி நால்வர்’ நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு புது வீச்சைத் தந்தவர்கள். அவர்கள் நால்வரையும் ஒன்றாகச் சந்திக்க வைத்தது பற்றிய பதிவு புதுமையான அனுபவத்தைத் தரும். புதுமைப்பித்தன், க.நா.சு., சி.சு. செல்லப்பா, பிரமிள், சுந்தர ராமசாமி என தமிழ் இலக்கிய மேதைகள் மொழிபெயர்த்த உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் இலக்கிய ரசனையை மேம்படுத்தக் கூடியவை. தமிழகத்தின் ஒவ்வொரு மண்டலத்துக்கும் அடையாளமாக உள்ள உணவு வகைகளின் சிறப்பம்சங்கள், பண்பாடு, வரலாறு இந்த இதழில் விரிவாகப் படைக்கப்பட்டிருக்கிறது. நம் வாழ்க்கையில் நெருக்கமாக உறவாடிக் காணாமல் போய்விட்ட பல பொருட்கள், அம்சங்கள் குறித்து மலரின் குறுங்கட்டுரைகள் அசைபோட வைக்கின்றன. பெண்களின் மேம்பாட்டுக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட நாடு போற்றும் நான்கு பெண் ஆளுமைகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்படிப் பல்வேறு அம்சங்களுடன் தீபாவளிப் பண்டிகை தரும் மகிழ்ச்சியை ‘தி இந்து’ தீபாவளி மலர் இரட்டிப்பாக்கும்.
Book Details
Book Title 'தி இந்து' தீபாவளி மலர் 2017 (The Hindu Deepawali Malar 2017)
Publisher தமிழ் திசை (THE HINDU Publication)
Pages 0
Year 2017

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha